பல கோடி ரூபா பணம்..

கொழும்பில் பணிப்பெண்ணாக பணி புரியும் பெண்ணொருவரின் வங்கிக் கணக்கில் பெருமளவு பணம் இருந்தமையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போ தை ப் பொ ருள் வர்த்தகரின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணின் வங்கி கணக்கில் 2 கோடி ரூபாயை விடவும் அதிக பணம் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரான்ட்பாஸ் பொலிஸாரினால் நேற்று இரவு இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ச ந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் 70 வயதுடைய உடல் ஊனமுற்ற தாய் ஒருவரை பார்த்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது வங்கி கணக்கை சோதனையிடும் போது இரண்டரைக் கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்ததென்பது தொடர்பில் பொலிஸார் தீவிர வி சாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





