பத்திக் பதித்த ஆடையணிந்து நாடாளுமன்றம் வந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர!!

590

தயாசிறி ஜயசேகர..

இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர நேற்று பத்திக் பதித்த ஆடையணிந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வு நேற்று காலை இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர பத்திக் பதித்த ஆடையணிந்து நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

அண்மையிலேயே, பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.