இராவணா எல்ல பகுதியில் வான் பள்ளத்தில் புரண்டதில் இருவர் ப லி!!

532

எல்ல பகுதியில்..

பதுளை எல்ல – வெல்லவாய வீதியில் இராவணா எல்ல பிரதேசத்தில் வான் ஒன்று பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உ யிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானின் சாரதி உட்பட 6 பேர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிரிகல, பதுளை, வெல்லவாய மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வானில் பயணித்த மற்றுமொரு நபர் வானுக்குள் சிக்கியுள்ளதுடன் அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உ யிரிழந்தவர்களின் சடலங்கள் தெமோதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.