கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விஷேட அறிவிப்பு!!

581

கொரோனா தொற்று..

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணிவது தொடர்பாக முதல் முறையாக உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை பெரும் அ ச்சுறுத்தி வருகின்றது. தற்போது 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையின் உலக நாடுகள் தீவிரம் காட்டியுள்ளன. ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது.

எனினும், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. அவை மருத்துவ பரிசோதனைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலமே தொற்று பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. இதனால், கொரோனா பரவியுள்ள அனைத்து நாடுகளும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது.

இந்நிலையிலேயே, 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஐந்து வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக்கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது.

அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்” என கூறியுள்ளது.