வவுனியாவை வந்தடைந்த சமூக ஒற்றுமையை வலியுறுத்திய நடைபயணம்!!

1164

நடைபயணம்..

இலங்கையில் இனநல்லுறவையும் சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது.

குறித்த நடைபயணம் இன்று (05.09.2020) மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்திருந்தது.

காலியினை சேர்ந்த 40வயதுடைய சுப்பிரமணியம் பாலகுமார் என்பவரினால் கடந்த (08.08.2020) அன்று காலியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் இம்மாதம் 2ம் திகதி யாழ்ப்பாணத்தினை வந்தடைந்திருந்தார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து 2ம் திகதி மாலை மீண்டும் காலி நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்திருந்தார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தில் மூன்றாம் நாளான இன்று (05.09.2020) வவுனியா நகரை வந்தடைந்திருந்தார்.