நிர்வாண கப்பல் ஒன்றில் பயணித்த பெண் ஒருவரை, வாலிபர் மிக கொடூரமாக கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலந்த்– அமெரிக்க உல்லாச கப்பல் ஒன்றில், இந்தோனேஷியாவை சேர்ந்த கேடூட் புஜயஷா என்பவர் ரூம் போயாக வேலை செய்து வந்தார். இக்கப்பலில் பயணம் செய்த 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், புஜயஷாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த புஜயஷா அன்றிரவு அறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்ததுடன் குறித்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை கப்பலில் இருந்து வெளியே தூக்கி எறிய முயற்சி செய்துள்ளார்.
இந்த சத்தம் கேட்டு மற்ற பயணிகள் விரைந்து வந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அமெரிக்க பொலிசார் புஜயஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், தனது தாய்-தந்தையரை திட்டிய காரணத்தினால் தான் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.




