7 தமிழர்களின் விடுதலை : சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பு!!

810

7 tamil

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

உச்சநீதிமன்றமும் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலையை மத்திய அரசு எதிர்க்கும் என்பது எதிர்பார்த்துதான். அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வார்கள் என்பது தெரியும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம் என்றார்.