
தமிழகத்தில் கடந்த 13ம் திகதி இரவு பணி முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த, உமா மகேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார்.
உமா மகேஸ்வரியின் உடலில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகித்தனர். அதனைத் தொடர்ந்து விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் இருவரைப் பொலிசார் கைது செய்தனர். உமா மகேஸ்வரியில் செல்போன் மற்றும் கிரெடிட் கார்டை பயன் படுத்தியதன் மூலம் அவர்கள் பொலிசில் சிக்கியுள்ளனர்.
உமா மகேஸ்வரி கொலை வழக்கில் நேற்று நான்கு பேர் கைதானதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இரு காம வெறியர்கள் மட்டுமே கைதாகியுள்ளதாகவும், 2 பேர் தப்பி விட்டதாகவும், அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான இருவருமே சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தவர்கள். தினக் கூலிகள். இவர்கள் பொலிஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்..
தினசரி மது அருந்துவோம் நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் 500 ரூபா கூலி கிடைக்கும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.
அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி வீதியில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் ஹிந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம்.
இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.
உமாமகேஸ்வரி எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13ம் திகதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.
போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச் சென்றோம்.
அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை, கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் உல்லாசம் அனுபவித்தோம்.
எங்கள் காம இச்சை தணிந்தபோது, உமா மகேஸ்வரி மயக்கமானார். அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம்.
இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார். கத்தியை எடுத்து அடி வயிற்றில் குத்தினோம் அவரை உயிரோடு விட்டால் எங்களை பொலிசில் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்தோம்.
இதனால் நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை. இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.
கல்பாக்கத்திற்குத் தப்பினோம் நாங்கள் இருவரும் கல்பாக்கத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தோம். பத்திரிகைகளில் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி எதுவும் வரவில்லை. எங்களது கூட்டாளிகள் மற்ற இருவரும் தனியாக சென்றுவிட்டனர்.
கடந்த 2 நாளுக்கு முன்பு பத்திரிகை செய்தியை தமிழ் தெரிந்தவர்கள் மூலம் படித்தபோது உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வந்தது. கொலையாளிகள் யார் என்பது பற்றி பொலிசார் கண்டுபிடிக்கவில்லை என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதனால் தைரியமாக இருந்தோம்.
தப்பிச்செல்லும்போது உமா மகேஸ்வரியின் செல்போனையும், வங்கி கிரெடிட் கார்டையும் எடுத்து வந்துவிட்டோம். நாங்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து பொலிசார் எங்களை கைது செய்துவிட்டனர் என்று இந்த இரு அயோக்கியர்களும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த வழக்கில் கண்காணிப்பு கமரா உதவியால், கொலையாளிகளை கைது செய்ததாக சி.பி.சி.ஐ,டி. ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி மகேஷ்குமார் அளித்த பேட்டியின்போது…
பெண் என்ஜீனியர்கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கமரா, குற்றவாளிகளை பிடிக்க உதவி உள்ளது. கொலையாளிகள் பெண் என்ஜீனியயரை கொலை செய்தவுடன் அவர் வைத்து இருந்த வங்கி கிரெடிட் கார்டு மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று உள்ளார்கள். வரும் வழியில் கிரெடிட் கார்டு மூலம் குறிப்பிட்ட வங்கியில் பணம் எடுக்க முயற்சித்து உள்ளனர்.
ஆனால் அவர்களால் பணம் எடுக்க முடியவில்லை. பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்ட கொலையாளி உத்தம் மண்டலின் உருவம் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகி உள்ளது. அப்போது உத்தம் மண்டல் சிவப்பு கலர் சட்டை அணிந்து உள்ளான்.
அந்த கமரா காட்சியை வைத்து அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, எங்களுக்கு துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்தோம். கமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம்.
கொலையாளிகள் பெண் என்ஜீனியர் வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வைத்து அவரை கடத்திச் சென்றுள்ளனர். 13ம் திகதி அன்று இரவே பெண் என்ஜீனியரை கொலை செய்துவிட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க 170 பொலிசார் பயன்படுத்தப்பட்டனர்.
பரிசுத்தொகை 2 லட்சத்தையும் யாரிடம் கொடுப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது இரகசியமானது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு முழுவிவரமும் தெரிவிக்கப்படும்.
கைதான குற்றவாளிகள் மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் உத்தம் மண்டல் திருமணம் ஆனவர். அவரது மனைவி சொந்த ஊரில் இருக்கிறார். இவர்கள் வேறு ஏதாவது இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் காவலர்களோடு சேர்த்து பொலிசாரும் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்து உள்ளோம். அந்தப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றிவிட்டு இருட்டுப்பகுதியில் விளக்குகளை எரிய விடவும் கேட்டுள்ளோம். அங்குள்ள பெரும்பாலான கம்பெனிகளில் முன் வாசல் கேட் இல்லை. இனிமேல் முன்வாசலில் கேட் பொருத்த கேட்டுள்ளோம்.
கண்காணிப்பு கமராக்களை பொருத்தவும் வலியுறுத்தியுள்ளோம். அந்தப்பகுதியில் வேலைபார்க்கும் வெளிமாநிலத்தவர்களின் பட்டியலை அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தினர் புகைப்படத்தோடு சேகரித்து வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளோம் என இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.




