ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலையில் இன்று முடிவு!!

742

Murukanஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளான 7 பேரின் விடுதலை குறித்த முடிவை உயர் நீதிமன்றம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

மேலும் இவர்களது விடுதலை குறித்து மாநிலஅரசு முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து, தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை சட்டசபையில் வெளியிட்டார்.

இந்நிலையிலேயே இவர்களின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.