35 வயது ஆசிரியரை மணந்த 17 வயது மாணவன்!!

480

Teachar

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் 35 வயது ஆசிரியை, 17 வயது மாணவனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் பெர்னாட்டி ஸ்மித் என்ற ஆசிரியைக்கு, 17 வயது மாணவன் கேரி ரால்ஸ்டன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் காதலாகவே மாறவே, இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர், மாணவனுக்கு திருமண வயது ஆகாததால், ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியை ஸ்மித் கூறுகையில், எனக்கும் மாணவன் ரால்ஸ்டனுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக காதல் இருந்து வந்தது.

நானும் அவனும் பள்ளியில் ஒன்றாக பேசி சந்தித்து வந்தோம், அவனை திருமணம் செய்து கொண்டதால் தான் மிகுந்த அதிர்ஷ்டசாலி ஆனேன், நான் மட்டும் சிறையில் எப்படி தனியாக வசிக்க போகிறேனோ என மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.

மாணவன் ரால்ஸ்டன் கூறுகையில், என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.17 வயதுடைய நான் எனது 35 வயது ஆசியரை திருமணம் செய்து கொண்டேன்.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தேன், ஆசிரியர் உடன் தங்கி இருந்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தற்போது அவருடன் கழித்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது என்றும் என் வீட்டின் பெட்ரூம் முழுவதும் ஆசிரியை புகைப்படம் முழுவதும் ஒட்டியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் சிறையில் இருந்து திரும்பியவுடன், அவருடேனே சேர்ந்து வாழப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.