வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தின் “நாளைய உலகம்” குறும்படம்!! (வீடியோ)

411

Pon

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வெளிவரும் புதிய குறும்படம் நாளைய உலகம்.

நாளைய உலகம் என்பது எவ்வாறு இருக்கும் என்பதையும் எமது பிரதேசங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பதனையும் அந் நிலையில் எமது எதிர்கால சந்ததியின் வாழ்வியல் முறைகளையும் ஒருமுறை பார்த்து மகிழ வைப்பதே நாளைய உலகத்தின் சிறப்பியல்பாகும்.

வவுனியாவில் குறும்பட வளர்ச்சியில் தனக்கென இடம்பிடித்த படிப்பு, வெளிநாடு, விடியல் ஆகிய வெறியுடன் குறும்படங்களை இயக்கிய பொன் வீடியோ மீடியா கலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சிங்கத்தால் இயக்கப்பட்ட இக் குறும்படம் வியத்தகு விடயங்களை பார்வையாளர்களுக்கு வழங்கும் என்பதுடன் பல குறும்பட இயக்குனர்களுக்கு வழிகாட்டியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.

இக் குறும்படத்தில் கபில், பொன் சுபாஸ், நாகராசா, சிவநேசன், துஸ்யந், சகீரன் ஆகியோர் நடித்துள்ளதுடன் கதை, படத்தொகுப்பு, இயக்கம் ஆகியவற்றை எஸ். சுபாஸ்சிங்கமும் தொழில்நுட்ப யுக்திகளை எஸ்.சகீரனும் மேட்கொண்டுள்ளனர்.

இப் படத்தின் இயக்குனரான எஸ்.சுபாஸ்சிங்கம் இந்தியாவில் சினிமா தொடர்பான கற்கை நெறியை பூர்த்தி செய்ததுடன், பல்வேறு நாடுகளிலும் சினிமா தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.