பெண் முகத்தில் திராவகம் வீசியவரின் கண்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!!

557

COurtஈரானில் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசிய நபரின் கண்களை அகற்றும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரான் சட்டப்படி எந்த குற்றத்திற்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின், உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனை வழங்குவதை அந்நாட்டு நீதிமன்றம் கடைப்பிடித்து வருகிறது.

தலைநகர் டெஹ்ரான் அருகே ஒரு பெண்ணின் மீது திராவகம் வீசிய நபர் கைது செய்யப்பட்டார். திராவக வீச்சில் அந்த பெண்ணின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அசிட் வீசிய குற்றவாளியின் கண்களை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளது.