உண்மைய சொல்லுங்கள் என கதறும் உறவினர்கள் : விமானியின் கடைசி வார்த்தைகள் வெளியானது!!

317

Pilot

காணாமல் போன மலேசிய விமானம் குறித்து இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது.

இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப் பெறவில்லை, விமானத்தை தேடும் பணியில் சீனா, அமெரிக்கா மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம் மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது, பின்னர் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமானம் மாயமானது குறித்து உண்மையான தகவல்களை தெரிவிக்க கோரி, பயணம் செய்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள், மலேசிய மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பீஜிங்கில் ஓட்டல் ஒன்றில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை சந்தித்து பேசிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டுக்கு அறையுடன் தொடர்பில் இருந்த பைலெட் இறுதியாக ‘ஓல் ரைட், குட் நைட்’ என்று கூறியுள்ளார்.

விமானம் ரேடார் தொடர்பை இழந்ததற்கு முன்னர் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல் இது தான் என்று கோலால்பூர் விமான கட்டுபாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.