பணம் மோசடி : மருதானையில் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!!

319

policeமத்திய கிழக்கு நாடொன்றில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த முகவர் நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோடிக்கணக்கான பணத்தை மோசடிசெய்த மருதானை பகுதியிலுள்ள தொழில்வாய்ப்பு முகவர் நிலையமொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், குறித்த முகவர் நிலையத்தின் உரிமையாளர் தப்பிச்சென்றுள்ளார். எனினும், முகவர் நிலையத்திலிருந்த 223 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 183 பேரிடம் இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.