சாலை விதிகளை மீறியதாக 2 வயது குழந்தைக்கு அபராதம் விதித்த பொலிசார்!!

984

அமெரிக்காவில் 2 வயது குழந்தைக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சா டாரியா மிஷா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீட்டின் வெளியே மோட்டார் காரை வேகமாக ஓட்டியுள்ளது.

அப்போது அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த வெலஸ்கோ என்ற பொலிசார் மற்றும் அவரது சகவூழியர்கள் டாரியா விளையாடி கொண்டிருப்பதை பார்த்தனர்.

இதனையடுத்து அக்குழந்தையை பின்தொடர்ந்து மடக்கியதுடன், அபராத சீட்டொன்றை கொடுத்துள்ளனர். அதில் 4 டொலர்கள் அபராதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மிக விசித்திரமான இச்சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது குழந்தையின் மாமா கெயத் மிஷா என்பவர் டாரியாவை அன்போடு ஏந்தியதுடன், தங்கள் குடும்பத்தில் மறக்க இயலாத நிகழ்வொன்றை பொலிசார் ஏற்படுத்தியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

R1 R2

R3