நிக்கோபார் தீவில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பில்லை!!

585

Earthquakeரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் நிகோபார் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.11 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த ஆபத்துகள் எதுமில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இதனால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.