அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் ஏற்படவுள்ள ஆபத்து : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

1208

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

அடுத்து சில மாதங்களில் கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான டெல்டா திரிபு உலகம் முழுவதும் துரிதமாக பரவும் ஆபத்து காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே இந்த வைரஸ் திரிபு உலகம் முழுவதும் 124 நாடுகளில் பரவியுள்ளது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு தற்போது அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் டெல்டா திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த மூன்று வாரங்களில் உலகம் முழுவதுமு் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.