அம்பாறையில் “பீடி குறுப்” கொள்ளைக் குழு கைது!!

639

Arrestஅக்கரைப்பற்று பிரதேசத்தில் 20 கோவில்கள், வீடுகள் பாடசாலைகள், கடைகள் உட்பட ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்களை நீண்ட காலமாக கொள்ளையிட்டு வந்த 16 வயது தொடக்கம் 20 வயதுடைய ஆலைடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட பீடி குறுப் கொள்ளைக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட சைக்கிள்கள், மோட்டார்சைக்கில் உட்பட பல இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கொள்ளைக் குழுவினரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தததையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரனையில் கொள்ளைக் குழுவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அக்கரைப்பற்று தொடக்கம் பொத்துவில் வரையுள்ள கோலில்களின் உண்டியல்கள், உடைத்து விக்கிரகங்கள் குத்து விளக்குகள் மற்றும் செம்பு தாம்பாளங்கள் உட்பட 10 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான பொருட்கள் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேவேளை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள ஹேட்டல் ஒன்றில் கொள்ளை, மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் பம்புகள், வீட்டு கதவு நிலைகள், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், தங்க ஆபரணங்கள், மடிக் கணணிகள், இராமகிருஸ்ண் மிஷன் மகா வித்தியாலயத்தின் 4 கனணிகள், பொதுகட்டிடங்களில் உள்ள தண்ணீர் பம்கள், கடைகள் மற்றும் பல்வேறு கொள்ளைகள் உட்பட கொள்ளையில் ஈடுபட்டதுடன் பிரதேசத்தில் பீடிக்குறுப் என்ற பெயரில் பொதுமக்களை தாக்குவது கத்தியால் குத்துவது மற்றும் பல்வேறு அடாவடித்தனங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விற்பனை செய்த 9 துவிச்சக்கரவண்டிகள், உதிரிபாகங்களாக கழற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் கனணி கீபோட், உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பழைய இரும்புக்கடைகளில் விக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோன்று பாடசாலையில் கொள்ளையிட்ட கனணிகள் கல்முனையில் விக்கப்பட்டுள்ளதாகவும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இவ் கொள்ளைக்குழுவினர் எதிர்காலத்தில் வங்கி ஒன்றை கொள்ளையிடுவதற்கான திட்டம் தீட்டியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.