வெளிநாடுகளிடம் அடிபணியப் போவதில்லை : ஜனாதிபதி!!

687

Mahindaஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக 48 நாடுகள் வாக்களித்தாலும் தாய் நாட்டை வெளிநாடுகளிடம் அடிபணிந்து போக இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவா நகரில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும் 29ம் திகதி நடைபெறும் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றிபெறும்.

இலங்கையர்கள் காட்டிக்கொடுத்ததன் காரணமாவே ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்ற முடிந்தது. அரசியல் ரீதியான பகை கொண்ட சிலர் தற்போது அப்படியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டை மீண்டும் காலனித்துவ நாடாக மாற்ற மக்கள் தயாராக இல்லை என்ற செய்தியை 29ம் திகதி உலகத்திற்கு வழங்க வேண்டும்.

ஜெனிவாவில் நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கை தோல்விடைந்தாலும் 29ம் திகதி வெற்றிபெற்றே ஆக வேண்டும். இந்த வெற்றி தாய் நாட்டு மக்களின் வெற்றி எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.