தம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலினால் பள்ளிவாசலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் பள்ளிவாசல் நிரவாகம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை என தெரிவிக்கும் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





