அமெரிக்க பிரேரணை 11மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் : வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியா!!

750

UNஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன் நிலையில் வாக்கெடுப்பில் இந்திய கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.