சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை : இலங்கை திட்டவட்டம்!!

693

GL.Periss

சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், உள்ளக பொறிமுறைமை ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்படும் எனவும் இலங்கை தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நாடுகளினால் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அமெரிக்க பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.