வவுனியாவில் உத்தரவாதமின்றி ஒக்ஸிமீட்டர் விற்பனை செய்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

2288

ஒக்ஸிமீட்டர்..

வவுனியாவில் பொருளுக்கான உத்தரவாதமின்றி ஒக்ஸிமீட்டர் விற்பனை செய்த மூன்று மருந்தங்கங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் மருந்தங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வவுனியா வைத்தியசாலை வீதி, வவுனியா நகர், குருமன்காடு சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்களில் ஒக்ஸிமீட்டர் உத்தரவாதம் இன்றி விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியாவில் ஒக்ஸிமீட்டர் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,

ஒக்ஸிமீட்டர் ஒன்றுக்கான அதிகூடிய சில்லறை விலை 3000 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.