கொழும்பு மக்களின் அதிக விருப்பு ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு!!

647

Hirunika

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி அவர் 139 034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115 638 வாக்குகளையும் உபாலி கொடிகார 78 222 வாக்குகளையும் ரெஜர் செனவிரத்ன 44 011 வாக்குகளை பெற்ற அதேவேளை மல்ஷா குமாரதுங்க 43 324 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67 243 விருப்பு வாக்குகளையும் மஞ்சு ஶ்ரீ அரங்கல 45 654 வாக்குகளையும் முஜீபர் ரஹூமான் 42 126 வாக்குகளையும் நிரோஷன் பாதுக்க 33 846 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் ஜேவிபியின் கீழ் போட்டியிட்ட கே.டீ.லால்காந்த 45 460 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.