
இலங்கையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி முதல் 10 மாணவர்களுள் தமிழ் மாணவர்கள் எவரும் தெரிவாகவில்லை என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி முதலிடத்தை இருவரும் நான்காம் இடத்தை முவரும் ஐந்தாம் இடத்தை இருவரும் பெற்றுக் கொண்டுள்ளனர்
1 கே.ஏ. மெனுஸிகா ஜயனி காரியவசம் – இரத்மதானை மகளிர் கல்லூரி
1 தபோதா கரிந்தி – விசாகா வித்தியாலயம், கொழும்பு
2 எம்.டபிள்யூ. உசித தெஜான் குணசேகர – மாத்தறை ருகுணு வித்தியாலயம்
3 எம். ரவின் லசிது தென்னகோன் – ஆனந்த மகா வித்தியாலயம், கொழும்பு
4 கலிது வேதிக விக்கிரமசிங்க – ராநுகீய வித்தியாலயம் கொழும்பு
4 டீ.எப். ரொஸானா தரிந்தி – காலி சவத்லன்டி வித்தியாலயம்.
4 என்.எப். திலிணி இதுல் பொன்சேகா – விசாகா வித்தியாலயம், கொழும்பு
5 ஆர்.எம். சௌமசா குமாரிகாமி அபேரத்ன – மகாஓயா பெண்கள் வித்தியாலயம் கொழும்பு.
5 கே. துலஞ்சனா மினிகிரணி அமாயா தர்மசிறி – மல்லியதேவ மகா வித்தியாலயம், குருநாகல்
இதனிடையே, கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்திகளை பெற்ற முதல் 5 மாணவ மாணவிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, ஜனாதிபதியினால் குறித்த மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





