யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுப்பிட்டியினைச் சேர்ந்த மார்க்கண்டு மயூரன் (28) சந்திரன் மதுசுதன் (24) ஆகிய இருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைக்குலை விற்பனை செய்வது தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




