தங்க நகைகளுடன் சென்னை செல்லவிருந்த 3 பெண்கள் கைது!!

616

Arrestஅரைவாசி செய்து முடிக்கப்பட்ட நிலையில், 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துச் சென்ற மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

44, 46 மற்றும் 58 வயதுடைய குறித்த பெண்கள் நேற்று சென்னைக்குச் செல்லத் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரைவாசி செய்து முடிக்கப்பட்ட நிலையில், 21 நகைகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.