வவுனியாவில் பெய்த கடும் மழையினால் 57 குடும்பங்கள் இடம்பெயர்ந்ந்துள்ளன!!(படங்கள்)

549

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னாட்டி, தம்பனைவீதி, கல்லுமலை, மருக்காரம்பளை கிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களே கடும் மழையால் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

நேற்று (29) மாலை பெய்த காற்றுடன் கூடிய மழையினால் இவர்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் வீடுகளுக்குள் மழை நீர் வந்தமையினால் மக்கள் இடம்பெயர்ந்து பொது நோக்கு மண்டபமொன்றில் தங்கியுள்ளனர்.

அவ்விடத்தை உடனடி நலன்புரி நிலையமாக மாற்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 3 4 5