IAS அதிகாரி கேட்ட வரதட்சணை.. திருமணம் வேண்டாம் என ஓடிய பல பெண்கள்.. இறுதியில் நடந்த திருப்பம்!!

1116

பேராவூரணியில்..

பேராவூர்யணி அருகில் ஒட்டங்காடு என்ற ஒரு கிராமத்தில் வசிப்பவர் IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன். இவர் படிப்பு முடிந்த நிலையில் பெற்றோர்கள் திருமணத்திற்காக பல படித்த பெண்களை பார்த்துள்ளனர்.



இவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் இவருக்கு தனது மனைவியாக வருபவர் ஒரு வைத்தியராக இருக்க வேண்டும் என்பதே ஆசை ஆகும். எனவே இவருக்கு வைத்தியரான பல பெண்களை பார்த்துள்ளனர். இருப்பினும் இவர் கேட்ட வரதட்சனைக்கு யாரும் கைக்கூடி வரவில்லை.

தன்னை திருமணம் செய்யும் பெண்களிடம் இவர் வரதட்சணையாக அவர் வசிக்கும் இடத்திற்கும் அதை சுற்றியுள்ள இடத்திற்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இலவசமாக வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட எவரும் இவரை திருமணம் செய்வதற்கு முன்வரவில்லை.

பின்னர் சமீபத்தில் இவருடைய வரதட்சணைக்கு ஒப்புக் கொண்ட கிருஷ்ணபாரதி என்ற பெண்ணுடன் கோலகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருவதால் பல நெட்டிசன்கள் இவரது நல்ல எண்ணத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.