மகிழ்ச்சியான செய்தி… இனி மூன்று நாட்களில் கடவுச்சீட்டு பெறலாம்!!

3729

கடவுச்சீட்டு..

மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.