உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் வசித்து வருபவர் 28 வயது ஷிவ் வீர். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ஷிவ் வீரின் சகோதரனுக்கு சோனுவுடன் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கச் சென்று விட்டனர். புத்தம் புதுமணத் தம்பதியரான ஷிவ் வீரின் சகோதரன், சோனு இருவரையும் அதிகாலை 5மணிக்கு ஷிவ் வீர் கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மற்ற உறவினர்களான சகோதரர் பஹ்லன், சோனியின் சகோதரன் சவ்ரவ், நண்பன் தீபக் மொத்தம் 5 பேரை ஷிவ் வீர் கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

அத்துடன் அவரது ஆத்திரம் ஓயவில்லை. தொடர்ந்து ஷிவ் வீர் தனது மனைவி, அத்தை, தந்தை ஆகியோரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். அவர்கள் படுகாயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பிறகு இவர்கள் அனைவரையும் கொலை செய்த ஷிவ் வீர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற ஷிவ் வீர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர் பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது





