இங்கிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்!!

1030

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவரே உயிரிழந்துள்ளார்.

மாணவர் வீதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக 27 வயதான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.