
புத்தரின் உருவத்தை பச்சை குத்தியபடி இலங்கைக்குள் பிரவேசித்தமைக்காக திருப்பியனுப்பப்பட்ட பிரித்தானியப் பெண்ணால் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மூவர் அடங்கிய நீதிபதிகளால் நேற்று குறித்த மனுவை டிசம்பர் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டபின் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைப்பாட்டாளருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், பலவந்தமாக 2000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், இதன்போது பிரித்தானியப் பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனினும் இவ்வாறு புத்தரின் உருவத்தை பச்சை குத்தியபடி நாட்டுக்குள் பிரவேசித்தால் சமயம் சார்பான சர்சைகள் ஏற்பட்டு, அவருக்கு பாதுகாப்பின்மை ஏற்படலாம் என்பதாலேயே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் சுற்றுலா சபை முறைப்பாட்டாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமாக தன்னைக் கைதுசெய்து, வெளியேற்றி மனித உரிமைகளை மீறியதால் இலங்கை அரசு ஒருகோடி ரூபா நஸ்டஈடு செலுத்த வேண்டும் என முறைப்பாட்டாளர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





