யாழில் பூட்டப்பட்ட அறையில் இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!!

754

Hang

யாழ். குருநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்ரன் செலஸ்ரா (19) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுக் கதவுபூட்டப்பட்டிருந்து. அழைத்தபோது எதுவித சந்தமும் இல்லாததால், கதவை உடைத்து வீட்டில் நுழைந்தபோது மனைவி சடலமாகக் காணப்பட்டார் என அப்பெண்ணின் கணவன் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.