
10 வயதான பாடசாலை மாணவி ஒருவருக்கு தலையில் குட்டுமாறு பணிப்புரை வழங்கிய பாடசாலை அதிபரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது
பொலநறுவை பக்கமுன தியபெடும வித்தியாலயத்தின் அதிபருக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பாதிக்கபட்ட மாணவர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தரப்புக்கள் தெரிவித்துள்ளன
பாடசாலைக்கு பிந்தி வந்ததுடன் நாளாந்த அட்டவணைக்கு ஏற்ப குறித்த மாணவி வகுப்பறையை சுத்தம் செய்யாமை காரணமாகவே அவரை தலையில் குட்டுமாறு நிர்வாக அலுவலகருக்கு அதிபர் பணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை படித்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் முன்னேற்றங்களை முழுமையாக அழித்துவிடும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.





