அளுத்கம விகாரையில் பௌத்த பிக்கு தூக்கிட்டு தற்கொலை!!

474

Monk

அளுத்கம, கொடல்ல தம்மிக்காராம விகாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் நேற்று (19.07) இரவு 11.30 மணியளவில் விகாரையில் உள்ள அறை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. பேருவல, வலபன பரமரனீயாராம விகாரையில் இருந்த குறித்த பிக்கு நேற்று மாலை தம்மிக்காராம விகாரைக்கு சென்றுள்ளார்.

தம்மிக்காராம விகாரையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கை தனக்கு வெறுத்து விட்டது எனவும் தனது பெற்றோரை கவனிக்குமாறும் தற்கொலை செய்து கொண்ட பிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். அக் கடிதம் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.