காதல் முறிவினால் பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். பல்கலைக்கழக மாணவன்!!

611

jaffna

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் நெல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்த நாகராசா சுதாகரன் (21) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த மாணவன் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை, இன்று அதிகாலை 4 மணியளவில் தனது முகப்புத்தகத்தில் “மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என்று அவர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த மாணவனின் தற்கொலைக்கு காதல் முறிவே காரணம் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை தற்கொலை செய்து கொண்ட சுதாகரனுக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.