மரண ஊர்வலத்துடன் ரயில் மோதி விபத்து : ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!!

669

Train

வனவாசல ரயில் நிலையத்திற்கு அருகில் மரண ஊர்வலம் ஒன்று ரயிலுடன் மோதியமையின் காரணமாக பிரதான ரயில் பாதையுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (24.07) பிற்பகல் 1.25 மணியளவில் பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்படி கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.