யாழ் உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட குழு மோதலில் 7 பேர் வைத்தியசாலையில்!!

607

Fight

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழு மோதலாக மாறியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று (23.07) மாலை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றினை பார்வையிட்டு கொண்டிருந்த இரு குழுக்களுக்கு இடையில் போட்டி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதனை அடுத்து இரு குழுவினரையும் அங்கிருந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய பார்வையாளர்கள் இரு குழுக்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஒரு குழுவினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து மற்றைய குழுவினர் தடிகள் மற்றும் பொல்லுகளால் தாக்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளவாலை வசந்த புரத்தை சேர்ந்தவர்களான மகேந்திரன் ரஞ்சித்ராஜ் (32), மகேந்திரன் அசோக்குமார் (30), மகேந்திரன் ராஜ்குமார் (28), மார்க்கண்டு கருணாகரன் (21) ஆனந்தராசா கபிலன்(23), பூதப்பிள்ளை சுரேஷ் குமார் (31) இந்தரஜித் தவநேசன் (32) ஆகிய 7 பேருமே படுகாயமடைந்துள்ளனர்.

இக் குழு மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களுமே உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச் சமபவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.