ஐநா மனித வள அபிவிருத்தி தரப்படுத்தலில் இலங்கைக்கு 75ஆம் இடம் : இந்தியா 135ஆவது இடத்தில்!!

696

SL

மனித வள அபிவிருத்தி சுட்டெண் வரிசையில் இலங்கைக்கு 73வது இடம் கிடைத்துள்ளது. எனினும் இந்தியாவுக்கு 135ஆவது இடமே கிடைத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் நடுத்தர அபிவிருத்தி நாடுகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த முன்னிடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை 73ஆம் இடத்தில் இருந்தது.

பாகிஸ்தானுக்கு 146ஆவது இடமும் பூட்டானுக்கு 136ஆவது இடமும், பங்களாதேஸுக்கு 142ஆவது இடமும் கிடைத்துள்ளன.

டோக்கியோவில் வெளியிடப்பட்ட இந்த சுட்டெண்ணின் அடிப்படையில் கல்வி தரம், வருமானம் போன்றவை கணிப்பிடப்பட்டுள்ளன.

187 நாடுகளை மையப்படுத்தியுள்ள இந்த சுட்டெண்ணில் முதல் 5 இடங்களையும் நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இறுதி இடத்தை சியாராலியோன் பெற்றுள்ளது.