திருமணம் செய்வதாக இணையத்தளம் மூலம் 17 பெண்களை ஏமாற்றியவர் கைது!!

1340

Abuse1

திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 யுவதிகளிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக உத்தியோகத்தர்களால் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இணையத்தளம் ஊடாக திருமண யோசனைகளை முன்வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த யுவதிகளை ஏமாற்றி அவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் சில யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மோசடிக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 யுவதிகளின் படங்களும் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாயிருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.