யாழில் 9 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!!

612

A12

யாழ் குருநகர் 5ம் மாடி பகுதியில் 9 வயது சிறுமிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்ததாக கூறப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த சிறுமிக்கு குருநகர் 5ம் மாடியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தனது மர்ம உறுப்பை காண்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் குறித்த சிறுமி பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மேற்படி இளைஞர் இவ்வாறு நடந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் யாழ்.பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனையடுத்து சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞனை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.