அநுராதபுரத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!!

560

Boy

கடத்திச் செல்லப்பட்ட மீகலெவ – குணுபொலகம பிரதேச வியாபாரியின் நான்கு வயது மகன் நேற்று (01.07) மாலை மீட்கப்பட்டுள்ளார்.

டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வியாபாரி மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இச் சிறுவன் குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு மீட்கப்பட்டார். இந்நிலையில் சிறுவன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

10 மில்லியன் ரூபா கப்பம் பெறும் நோக்கில் சிறுவன் கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த கடத்தலுடன் சிறுவனின் நெருங்கிய உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.