
நடுக்கடலில் இலங்கை அகதிகளை தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அவர்களை நவுரு தீவுக்கு அனுப்பியதன் மூலம் தொடர்வதாக அகதிகளின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
157 இலங்கை அகதிகளின் சட்டத்தரணிகள் இது தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
அகதிகளை நவுறு தீவுக்கு மாற்றியமையானது மேல்நீதிமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை என்று குறிப்பிட்டனர். குறித்த 157 இலங்கை அகதிகளும் நேற்று இரவு மூன்று விமானங்கள் மூலம் இரகசியமாக நவுரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் தமது கட்சிகாரர்களுக்கு நீதிமன்ற ஆணையின்படி அரசாங்கம் தேவையான வசதிகளை செய்துக்கொடுக்க வேண்டும் என்று அகதிகளின் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். இதேவேளை அகதிகள் நௌரு தீவுகளில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இதன்போது அவர்கள் அகதிகளாக அடையாளம் காணப்பட்டாலும் அவுஸ்திரேலியாவுக்கோ அல்லது இந்தியாவுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்று குடிவரவுத்துறை அமைச்சர் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேற்று குறித்த அகதிகளில் நான்கு பேருடன் தொலைபேசியில் பேச அனுமதி வழங்கப்பட்டதாக அகதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.





