
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதன்படி இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நயினா தீவு, டெல்ப் தீவு உள்ளிட்ட நாடு பூராகவுமுள்ள 2020 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்காக இரண்டு இலட்சத்து 96 313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
மேலும் பரீட்சை தொடர்பான மோசடிகள் இடம்பெறின் அது தொடர்பில் 1911 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 0112 78 42 08 மற்றும் 0112 78 45 37 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





