கிளிநொச்சி பளையை சேர்ந்தவரும் ஊற்றுப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இலங்கையை சேர்ந்த விசமிகள் சிலரால் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு சிறிய குழந்தைகளின் தந்தையான கேதீஸ்வரனின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அவரின் உடலை பெற்றுக்ககொள்ள வழிதெரியாது அவரது இளம் மனைவி மற்றும் உறவுகள் ஏங்கிய நிலையில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் உறவுகள் மூலம் உடலை பெற்றுக்கொண்ட முயற்சிகளை இடையறாது மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலிய கிளை மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் சங்கம் என்பன கைகொடுத்து தூதரகங்களுடன் பேசி மேற்கொண்ட முயற்சியில் ஏழு மாதங்களின் பின் நேற்று கேதீஸ்வரனின் உடல் ஊற்றுப்புலத்தை வந்தடைந்தது.
இதன் பிறகு அவரின் குடும்பத்தினர் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டனர். இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.கேதீஸ்வரனின் உடல் அவர்களின் குடும்பத்தாருக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைப்பதற்கு பாடுபட்ட அவுஸ்திரேலிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளை மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கம் அவுஸ்திரேலிய தூதரகம் என்பவற்றிற்கு பா.உறுப்பினர் தனது நன்றிகளை கேதீஸ்வரனின் குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்துள்ளார்.






