தமிழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞன் கைது!!

619

Abuse

இந்தியா – தமிழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூரைச் சேர்ந்த 14 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று காலை 10 மணிக்கு மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது கீழ்பட்டு கிராமம் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் தினகர் 20, என்பவர் வீட்டுக்குள் புகுந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தினகரை கைது செய்தனர்.