
இலங்கையில் பதிவு திருமணங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டில் பதிவு திருமணங்களின் எண்ணிக்கை 38 வீதமாக குறைந்துள்ளன.
இலங்கையில் திருமணம் செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்து வருவதாக பதிவாளர் திணைக்களத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் பதிவு திருமணத்திற்கான கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்தது. இதனால் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி வரும் இளைஞர், யுவதிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலைமையானது திருமணங்கள் குறைவதில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை 2013 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களினால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 550 பேர் இறந்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 38 வீத அதிகரிப்பாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





