
இளைஞர்களுக்கு எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி, எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் முடிவடைந்த காலப் பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் 25 வீதமானவர்கள் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாவர்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காக 110 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 950 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையான எயிட்ஸ் நோயாளர்கள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
பலர் தமக்கு எச்.ஐ.வி. தொற்றி உள்ளது என்பதை அறியாது இருப்பது பாரதூரமான பிரச்சினை எனவும் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.





