சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 9 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது!!

766

A6

தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கியூ பிரிவு காவல்துறையினரால் படகு மூலம் பயணிக்கவிருந்த இந்த இலங்கை அகதிகள் ஒரியூர் என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்களாவர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக அறை ஒன்றில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்தாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

காவல்துறையினர் வருவதை அறிந்த அவர்கள் அறையில் இருந்து வேறு இடம் ஒன்றுக்கு செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.